சம்பா கோதுமை ரவை கூட்டாஞ்சோறு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை - 1கப்

துவரம் பருப்பு - 1/2கப்

சின்ன வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 2

கேரட் - 1 சிறியது

வெள்ளரிக்காய் - 10 செமீ துண்டு

புடலங்காய் - 10 செமீ துண்டு

முருங்கைகாய் - 1 சிறியது

கொத்தவரங்காய் - 5

வாழைக்காய் - பாதி

கத்திரிக்காய் - 2 சிறியது

தக்காளி - 1

முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - 2 இனுக்கு

சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி

மல்லிக்கீரை - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

-----------------------------

அரைக்க:

------------------------------

தேங்காய் துருவல் - 1/4 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 2

பூண்டு - 2 பல்

கறிவேப்பிலை - 1 இனுக்கு

--------------------------

தாளிக்க:

-----------------------------

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 3/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2இனுக்கு

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

கோதுமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.

துவரம் பருப்புடன் கலந்து கழுவி 10நிமிடம் ஊறவிடவும்

காய்கறிகளை ஒன்றரை இன்ச் நீளமுள்ள விரலளவு துண்டுகளாக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் தக்காளி மற்றும் வெட்டிய காய்கறிகள் சேர்த்து மேலும் 3நிமிடங்கள் வதக்கவும்.

ஊறவைத்த கோதுமை ரவை, பருப்பு சேர்த்து இரண்டரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கலக்கவும்.

உப்பு புளி காரம் சரி பார்த்து கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முருங்கைக் கீரையை வதக்கவும்.

அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாகவும் இல்லாமல் மையாகவும் இல்லாமல் அரைக்கவும்.

நன்றாக கொதித்ததும் வதக்கிய முருங்கைக் கீரை மற்றும் அரைத்த தேங்காய் கலவை சேர்த்து கிளறி குக்கரை மூடவும்.

மிதமான தீயில் 3 முதல் 4விசில் வந்ததும் இறக்கவும்.

ப்ரஷர் அடங்கியதும் திறந்தால் சாதம் சற்று தளர்வாக இருக்கும்.

இதனிடன் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து மல்லிக்கீரை கலந்து கிளறி பரிமாறவும்..

குறிப்புகள்:

சூடாக இருக்கும் போது தளர்வாக இருந்தால்தான் ஆறும் போது ரொம்பவும் இறுகி விடாமல் இருக்கும்.