வேப்பம்பூ ரசம் (2)

on on on on on 2 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

ரசப்பொடி - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறு துண்டு

தக்களி - 1/2

காய்ந்த வேப்பம்பூ - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 4 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

மிளகாய் வற்றல் - 2

செய்முறை:

புளியை 1 1/2 கப் நீரில் கரைக்கவும். அத்துடன் உப்பு, பெருங்காயம், ரசப்பொடி, நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.துவரம்பருப்பை வேகவிட்டு நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

புளி வாசனை போய் நன்கு கொதித்து அளவில் பாதியானதும் பருப்பு தண்ணீர் விடவும்.மேலே நுரைத்து வந்ததும், ரசத்தை கீழே இறக்கவும்.

2 தேக்கரண்டி நெய்யை சுட வைத்து கடுகு போட்டு வெடித்ததும், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை வதக்கி ரசத்தில் சேர்க்கவும்.

மீதி நெய்யை சுட வைத்து வேப்பம்பூவை அதில் போட்டு நன்கு பொரிந்து கருஞ்சிவப்பு நிறமானதும் ரசத்தில் கொட்டவும்.

வேப்பம்பூவை ரசத்தை இறக்கி வைத்தபின்பே வறுத்துப் போட வேண்டும். இல்லையெனில் கசந்து விடும்.

குறிப்புகள்:

புளியை கரைத்துவிடாமல் அப்படியே போட்டும் செய்யலாம்.

வயிற்றுப் போக்கு, அஜீரணத்திற்கு இந்த ரசம் மிகவும் நல்லது.