வெங்காய தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
வேக வைத்த துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகு, சீரகம், மல்லி விதை - தலா 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டை, சோம்பு, கிராம்பு, கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், தக்காளியை பொடியாவும் நறுக்கி வைக்கவும்.
வேகவைத்த பருப்பில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
வெறும் வாணலியில் மிளகு சீரகம் மல்லி வறுத்து ஒரு சின்ன மெல்லிய துணியில் கட்டி தனியே வைக்கவும்.
எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பச்சை மளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.
இப்பொழுது கட்டி வைத்துள்ள மல்லி சீரகம் மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
நுரை கட்டி வரும் போது அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.