ரசம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு சிறிய துண்டு

நன்கு பழுத்த பெரிய தக்காளி - 1

தண்ணீர் - 1 கப்

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 5 இலைகள்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

குருமிளகு - 3/4 தேக்கரண்டி

பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வரமிளகாய் - 1

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் புளியை ஊறவைத்து கரைத்து தண்ணீர் எடுத்து கொள்ளவும்.

தக்காளியை நன்கு கசக்கி பிழிந்து தோலை நீக்கி புளித்தண்ணீருடன் கலந்து வைக்கவும்.

சீரகம், குருமிளகினை அம்மியில் அல்லது மிக்ஸியில் திரித்துக் கொள்ளவும். பிறகு பூண்டு, சின்ன வெங்காயதினை ஒன்றிரண்டாக தட்டவும்.

கறிவேப்பிலையையும் கசக்கி போடவும். இந்த அரைத்த கலவையை எடுத்து வைத்த புளி, தக்காளி கரைசலில் கலக்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, வரமிளகாய் போட்டு வெடித்ததும் கலந்து வைத்த புளித்தண்ணீரை ஊற்றவும்.

கொதி வரும்முன்பே ஓரம் நுரைக்கும்பொழுதே தீயை அணைத்து விட்டு நறுக்கின மல்லி இலை, ஒரு பின்ச் பெருங்காயப்பொடி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: