மொச்சைப்பருப்பு ரசம்
தேவையான பொருட்கள்:
மொச்சைப்பருப்பு - 1 கப்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஒரு ஸ்பூன் எண்ணையில் வறுத்துப் பொடி செய்ய:
மிளகாய் வற்றல் - 5 அல்லது 6 அல்லது ருசிக்கேற்ப
தனியா - 2 மேசைக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 3 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
கொப்பரைத் துருவல் - 1/4 கப்
காயம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
ஒரு தேக்கரண்டி நெய்யில் தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
மேலே தூவ:
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
மொச்சைப்பருப்பைத் தண்ணீரில், மிகச் சிறிதளவு உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாக வேகவிடவும். தண்ணீரை வடிக்க வேண்டாம்.
புளியைக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதித்ததும், பொடியைப் போட்டுக் கட்டி தட்டாமல் கலக்கவும்.
அரைக் கப் மொச்சைப்பருப்பைக் கையால் நன்றாக மசித்து விட்டு அதில் போடவும்.
சேர்ந்து கொதித்ததும் தண்ணீருடனிருக்கும் மீதிப் பருப்பையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
சிறிதளவு வெல்லம் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
நன்கு நுரைத்து வந்ததும் இறக்கித் தாளித்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்
குறிப்புகள்:
ரசம் சற்று கெட்டியாக வேண்டுமென்றால், வறுத்த சாமான்களை விழுதாக அரைத்து விடவும்.