மாங்காய் ரசம் (1)
0
தேவையான பொருட்கள்:
புளிப்பு மாங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 2
பருப்புத் தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
ரசப் பொடிக்கு பொடிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
மாங்காயை தோல் சீவி, துண்டாக்கி மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
அதனுடன் பருப்புத் தண்ணீர், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.