ப்ளம்ஸ் ரசம்
0
தேவையான பொருட்கள்:
ஊட்டி ஆப்பிள் (ப்ளம்ஸ்) - 4
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - மூன்று ஆர்க்கு
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக தட்டிக்கொள்ளவும்.
புளிப்பான ஊட்டி ஆப்பிளை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைத்து ஆறவைத்து தோலை எடுத்து விட்டு அரைக்கவும்.
எண்ணெயை காயவைத்து கடுகு, தட்டியதை சேர்த்து ரசப்பொடியும் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த பிளம்ஸ் கரைசலை ஊற்றி உப்பு போட்டு நுரை வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.