பொரித்த ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

பெருங்காயம் - சிறு துண்டு

சீரகம் - 1/4 தேக்கரண்டி

தக்காளி - 1

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பைப் போட்டு தண்ணீர் ஊற்றி பருப்பு குழையும் அளவிற்கு வேக வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, மிளகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து அதனுடன் சீரகத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த பருப்புடன் மேலும் சிறிது தண்ணீர் ஊற்றி தக்காளியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

தக்காளி குழைய‌ வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கவும்.

அதனுடன் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: