பைனாப்பிள் ரசம் (1)
தேவையான பொருட்கள்:
கட் செய்த அன்னாசிப்பழத்துண்டுகள் - 2 கப்
வெந்த துவரம் பருப்பு தண்ணீர் - 2 கப்
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் (தாளிக்க) - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கப் அன்னாசிப்பழத்துண்டுகளை மிக்சியில் அரைத்து ஜூஸ் செய்து வடிகட்டவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பருப்புத்தண்ணீர், மீதமுள்ள அன்னாசி துண்டுகள், மஞ்சபொடி, ரசப்பொடி, பெருங்காய பொடி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
5 நிமிடங்கள் கொதித்தது அரைத்து வைத்திருக்கும் ஜூசுடன் 2 கப் தண்ணீரும் சேர்த்து ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.
நுரைத்து வந்ததும் இறக்கி. நெய்யில் கடுகு மிளகாய் தாளித்து பரிமாறவும்.