பூண்டு ரசம் (3)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல்
தக்காளி - 3
மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்புடன் மஞ்சள் தூளினைச் சேர்த்து, போதுமான அளவு நீர் விட்டு, நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். மிளகாயைக் கிள்ளிப் போடவும்.
அத்துடன் பொடியாக நறுக்கின பூண்டினை சேர்த்து வதக்கவும். பூண்டினை நறுக்கியோ அல்லது நசுக்கியோப் போடலாம்.
பூண்டு சற்று வதங்கியவுடன் பொடியாய் நறுக்கின தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றி வேக விடவும்.
கரைசலுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, வேக வைத்து மசித்த பருப்பு அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும். ரசம் கொதித்து நுரைக்க ஆரம்பித்தவுடன் இறக்கி பரிமாறவும்.