பீட்ரூட் ரசம்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
காரட் - 1
பிரொக்கோலி - ஒரு சிறிய பூ
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 3 தேக்கரண்டி
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 6 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
காரட், பீட்ரூட் மற்றும் பிரொக்கோலியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் துவரம் பருப்பையும் சேர்த்து இரண்டு ஸ்டீம் விட்டு இறக்கவும்.
ஆறவைத்து மிக்சியில் ஒரு சுத்து சுத்தி வடிக்கடி அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகு சீரகத்தை பொடித்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் தாளிக்க கூறியவற்றை போட்டு தாளிக்கவும்.
நசுக்கிய பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி நன்றாக குழைந்து விடும்.
வடிக்கடி வைத்திருக்கும் தண்ணீரை சேர்த்து தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நுரை கட்டி வரும்போது பொடித்த பொடியை தூவி இறக்கவும்.
கொத்தமல்லி தழை எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.