பருப்பு ரசம் (6)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மல்லி விதை - 1/2 தேக்கரண்டி
மிளகாய் - 4
புளி - சிறு எலுமிச்சை அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், மல்லி விதை, மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ளவும்.
புளியைக் கரைத்து எடுத்துக் கொண்டு அதில் உப்பு மற்றும் அரைத்தப் பொடியைப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
நன்றாக கொதித்ததும் வெந்த பருப்பில் இருந்து நீரையும், சிறிது பருப்பையும் அதில் கொட்டவும்.
மேலும் சிறிது தண்ணீர் விட்டு சற்று நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி கிள்ளிப் போட்டு பரிமாறவும்.