பருப்பு ரசம் (4)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கப்
புளி - 1 நெல்லிக்காய் அளவு
மிளகாய் வற்றல் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2
பூண்டு - 4 பல் (தட்டியது)
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பை வேக வைத்து அந்த தண்ணீர் 2 கப் எடுத்து வைக்கவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து சிவக்க விடவும்.
இப்போது அதில் நறுக்கிய தக்காளி, தட்டி வைத்த பூண்டு சேர்த்து பிரட்டவும்.
தீயை சுத்தமாக குறைத்து ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
உடனே பருப்பு தண்ணி, புளி தண்ணி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் எடுத்து பரிமாறவும்..