நெஞ்செலும்பு ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெஞ்செலும்பு (மார்கண்டம்) - 150 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா - 25 கிராம்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும்.

எலும்பை சுத்தம் செய்துக் கொள்ளவும். சீரகம் மற்றும் தனியாவை பொடி செய்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் சேர்ந்து வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் பொடி செய்த தனியா சீரகத்தூளை சேர்த்து பிரட்டி விடவும்.

எலும்புடன் 4 அல்லது 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 முதல் 10 விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கரை திறந்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: