தேங்காய்ப் பால் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒரு மூடி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் - 3

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து பாலுடன் சேர்த்து, உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, மிளகாயைக் கிள்ளிப் போட்டு சிவந்ததும், மிளகைப் போடவும்.

மிளகு படபட வென்று வெடித்ததும் ரசக் கரைசலை ஊற்றி நுரை கூடியதும் ஒரு முறை கிண்டி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

அவசரத்துக்கு அதிகம் செய்ய வேண்டுமானால் பாதிப் பசும்பால் அல்லது எருமைப்பாலைக் கலந்து கொள்ளவும். இந்த ரசம் கொதித்து விட்டால் திரிந்த பால் போல நன்றாக இருக்காது.

கூட்டு வகைகளை வைத்துக் கொண்டு உண்ண இந்த ரசம் நன்றாக இருக்கும்.