தேங்காய்ப்பால் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய்ப்பால் - 1 கப்

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

வெந்த பருப்புத்தண்ணீர் - 2 கப்

மஞ்சப்பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

ரசப்பொடி - 2 தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கரைத்த புளித்தண்ணீருடன் ரசப்பொடி,உப்பு சேர்த்துக்கொதிக்க விடவும்.

புளி வாசனை போக கொதித்ததும் வெந்த பருப்புத்தண்ணீர் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பரிமாறவும்.

குறிப்புகள்: