தூதுவளை ரசம் (1)
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை - 25
நெய் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
புளி - 5 கிராம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
கொத்தமல்லிதழை - ஒரு கொத்து
மிளகாய் வற்றல் - 3
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் ஒரு கரண்டி நெய்யைக் காய வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு தூதுவளை இலைகளைப் போட்டு வதக்கிய பின் அரைத்துக் கொள்ளவும்.
புளியை 2 டம்பளர் தண்ணீரில் கரைத்து அதில் உப்பும் அரைத்தவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதிக்க வைத்தவுடன் பெருங்காயத் தூள், புதினா, மல்லி தழைகளைப் போட்டு இறக்கி பரிமாறவும்.