தூதுவளை ரசம்
தேவையான பொருட்கள்:
தூதுவளை கீரை - 10 இலைகள்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மிளகாய் வற்றல் - 3
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகம், பூண்டு, இவைகளைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து சக்கையை நீக்கிக் விட்டு புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும்.
தக்காளிப் பழத்தை மசித்து புளிக்கரைச்சலோடு சேர்த்து கொதிக்க வைத்து தட்டி வைத்த மிளகு, சீரகம், பூண்டு, சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் தூதுவளை இலை, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்து கொதிக்க வைத்திருக்கும் ரசத்தில் சேர்க்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்தை அதில் கொட்டி அதிகம் கொதிக்கவைக்காமல் ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.