தக்காளி ரசம் (9)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 150 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
காய்ந்தமிளகாய் - 3
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
ரசப் பொடி - 1 தேக்கரண்டி
மல்லித் தழை - அரை கட்டு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு தக்காளிப் பழத்தை மட்டும் சிறு, சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதம் உள்ள தக்காளியை தண்ணீரில் நன்கு பிசைந்து கரைத்துக் கொள்ளவும்.
பூண்டையும், மிளகையும் அம்மியில் வைத்து தட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி கரைச்சலுடன் ரசப் பொடி, தட்டிய மிளகு மற்றும் பூண்டு, சீரகம், உப்பு முதலியவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, மிளகாய் முதலியவற்றை போட்டு தாளித்து அதனுடன் மிளகு, சீரகம், தட்டிய பூண்டு போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகு அதனுடன் வெட்டிய தக்காளித் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
சற்று வதங்கியவுடன் கரைத்த ரசத்தை அதில் ஊற்றி கொதிக்கையில் மல்லித் தழை போட்டு உடனே இறக்கி பரிமாறவும்.