கொள்ளு ரசம் (5)
0
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 4 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு பல் - 4
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை ஊற வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி, கொள்ளு, வரமிளகாய் இவை நான்கையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
பூண்டை தட்டி வைக்கவும். புளியை 4 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து கடுகு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும் புளித்தண்ணீரை ஊற்றவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்ததும் அரைத்த விழுது, தட்டிய பூண்டு சேர்க்கவும்.
மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.