கொள்ளு ரசம் (3)
தேவையான பொருட்கள்:
கொள்ளு- கால் கப்
கடுகு- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- 6
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
சிறிய பூண்டிதழ்கள்-5
வெந்த பருப்பு- கால் கப்
புளி- சிறு எலுமிச்சம்பழம் அளவு
தேவையான உப்பு
எண்ணெய்- மேசைக்கரண்டி
அரிந்த கொத்துமல்லி- அரை கப்
கீழ்க்கண்ட பொருள்களை சிறிது எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும்.
பெருங்காயத்துண்டு- 1
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு- அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- அரை ஸ்பூன்
தனியா- ஒன்றரை ஸ்பூன்
வற்றல் மிளகாய்-3
செய்முறை:
கொள்ளுப்பருப்பை இலேசாக வறுத்து பின் நன்கு கழுவி 2 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும்வரை வேக விடவும்.
எண்னெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடு செய்யவும்.
கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி, பூண்டு இவற்றை மஞ்சள் தூளுடன் சேர்த்து குழைய வதக்கவும்.
வேக வைத்த கொள்ளை அதோடு இருக்கும் நீருடன் கொட்டவும். மேலும் 2 கப் நீர் சேர்த்து, உப்பு,பொடி சேர்த்து 3 நிமிடங்களுக்கு ரசத்தை கொதிக்க விட்டு இறக்கவும்.