கொள்ளு ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

தக்காளி - ஒன்று

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - அரை தேக்கரண்டி

மல்லி விதை - கால் தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 2

பூண்டு - 2 பற்கள்

உப்பு - தேவையான அளவு

கடுகு, எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

கொள்ளு பருப்புடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு மற்றும் மல்லி விதை சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளிக்கவும். அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான கொள்ளு ரசம் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது மிதமான சூட்டில் சூப் போல பருகலாம்.

குறிப்புகள்:

இந்த ரசம் ஜலதோசத்திற்கு நல்ல மருந்து. இதை 2 தினங்கள் உட்கொண்டால் ஜலதோசம் ஓடிவிடும்.

இதற்கு கொள்ளு பருப்பை ஊற வைக்கவோ, வறுக்கவோ தேவையில்லை.

மிளகில் உள்ள காரமே போதுமானது. காரத்திற்காக தனியாக மிளகாய் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.