குடைமிளகாய் பருப்பு ரசம்
0
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் (சிறியது) - 1
சிறிய தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வடகம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
செய்முறை:
பருப்பை நன்கு கழுவி விட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் புளியை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து குக்கரில், 3 விசில் வரும் வரைக்கும் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வடகம் போட்டு, வெடித்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் கொதிக்கும் போது வேக வைத்த பருப்பு கலவைவை கலக்கவும்.
பின்னர் புளிக்கரைச்சல் மற்றும் உப்பு சேர்க்கவும். கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.