கத்திரிக்காய் ரசம்
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 1
கார்ன் ப்ளார் மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஐந்து கொத்து
பூண்டு - 3 பல் (தட்டி கொள்ளவும்)
கொத்தமல்லி தழை - கடைசியில் மேலே தூவ சிறிது
செய்முறை:
கத்திரிக்காயை நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயும் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துள்ள புளியையும் ஊற்றி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து கத்திரிக்காயை வேகவிட விடவும்.
கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாசனை அடங்கியதும் கார்ன் ப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
கெட்டியாக இருந்தால் இன்னும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.