எழுமிச்சம்பழம் ரசம்
0
தேவையான பொருட்கள்:
எழுமிச்சம் பழம்- 2
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 2
கொத்தமல்லி இலை- சிறிது
தக்காளி - 2
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
வற்றல் - 2
கடுகு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் 1/2 லிட்டர் தண்ணீரில் தக்காளி பழத்தை நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
பின் அதில் மிளகு தூள், சீரகத்தூள், தட்டிய பூண்டு, கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து கடுகு,வத்தல் போட்டு தாளித்து நுரைவரும் போது இறக்கவும்.
பின் எழுமிச்சம்பழத்தை பிழிந்து ஊற்றி உப்பு சேர்த்து பரிமாறவும்.