எலுமிச்சை ரசம் (1)
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழ சாறு - 2 தேக்கரண்டி
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1/2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
வறுத்து பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும்.
2 கப் தண்ணீரில் தக்காளி, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கையால் நன்கு கரைத்து, கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும், பருப்பு தண்ணீர், பொடித்த பொடி சேர்த்து இறக்கவும்.
இறக்கிய பின் எலுமிச்சம் பழ சாறு சேர்த்து கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.