மிளகு குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்து பொடிக்க:

மிளகு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

கொதிக்க வைக்க:

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 3 தேக்கராண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி

வெந்தயம் - 5

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து ஆறியதும் காய்ந்த மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்க வேண்டும்.

புளியை கரைத்து மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

புளி வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை போட்டு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி பரிமாறவும்.

குறிப்புகள்: