ஸ்வீட் கார்ன் சூப் (2)
0
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 100 கிராம்
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1/2 லிட்டர்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
பால் - 150 மிலி
அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் வெண்ணெய் போட்டு, உருகியதும் மைதா சேர்த்து வறுக்கவும்.
1 நிமிடம் வறுத்தபின், பால் சேர்த்து கொதிக்க விடவும்.
1 நிமிடம் கழித்து, ஸ்வீட் கார்ன், காய்கறி வேக வைத்த தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கி பரிமாறவும்.
தேவையானால் 1 ஸ்பூன் ஃப்ரஷ் க்ரீம் மேலே ஊற்றி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.