முருங்கை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முற்றிய முருங்கைக்காய் - 2

பாசிபருப்பு - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இஞ்சி பூண்டு விழுது, பாசிபருப்பு, முருங்கைக்காய் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். 2 வீசில் வந்த பின்பு இறக்கவும்

நன்றாக முருங்கைக்காய் வெந்த பின்பு உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா சேர்க்கவும்.

மேலே கொத்தமல்லி இலை தூவி கப்பில் சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: