முருங்கைக்கீரை காம்பு சூப்(கர்ப்பிணி பெண்களுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை காம்பு - ஒரு கை அளவு

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சிறிய பூண்டு - 1

தேங்காய் பால் - 1/2 கப்

நெய் அல்லது நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முருங்கைக்கீரை காம்பை மட்டும் ஆய்ந்து கழுவி மிளகு, சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும்.

இறக்கி வடிகட்டி அதில் தேங்காய் பால், நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்.

குறிப்புகள்: