முடக்கற்றான் கீரை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முடக்கற்றான் கீரை பொடியாக நறுக்கியது - 5 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 4

தக்காளி - 4 துண்டு

பூண்டு - 5 பல்

ரசப்பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

இதில் தக்காளி, கீரை சேர்த்து வதக்கவும்.

பின் ரசப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: