ப்ரோக்கோலி கீறீம் சூப் (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
சிக்கென் குயூப் - 1 சிறியது
ப்ரோக்கோலி - 1 பெரிய பூ
கரட் - 1
உருளை கிழங்கு - 1
பால் - 1 கப்
நீர் - 1 கப்
க்றீம் மில்க் - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள எல்லா கறிகளையும் சிறிதாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் பால், நீர்,சிக்கன் குயூப் மற்றும் வெட்டி வைத்த மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்.
மரக்கறி நன்றாக வெந்ததும் ப்ளென்டரில் (blender) போட்டு மை போல அரைக்கவும்.
அரைத்ததை மறுபடியும் பாத்திரத்தில் ஊற்றி க்றீம் மில்க் கலந்து ஒரு கொதி வந்தததும் இறக்கி சூப் பவுலில் உப்பு தேவையென்றால் போட்டு பரிமாறவும்.