பொன்னாங்கண்ணிகீரை சூப்
0
தேவையான பொருட்கள்:
பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
சீரகம், சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கல்பாசி - 1
அன்னாசிப்பூ - 1
செய்முறை:
துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பருப்பை மசித்துக் கொள்ளவும்.
கீரையை ஆய்ந்து வெந்த பருப்பில் போடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சூப்பில் கொட்டவும்.
கடைசியாக உப்பு போட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.