பேபி கார்ன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 5

மசூர் தால் - 1/2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

பட்டை - சிறு துண்டு

லவங்கம் - 2

எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

க்ரீம் - 2 தேக்கரண்டி

கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.

பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்

கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை,லவங்கம் தாளித்து,கட் செய்த வெங்காயம்,தக்காளியை போட்டு வதக்கவும்.கார்னையும் சேர்த்துவதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும் கூட ஒரு டம்ளர் தண்ணீரு ஊற்றி கொதிக்க விடவும்.

5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி மேலாக க்ரீம்போட்டு சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: