பேபி கான் சூப்
0
தேவையான பொருட்கள்:
பேபி கான் - 6 பீஸ்
பாசி பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
குக்கரில் வெண்ணெய் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டக நறுக்கிய பேபிகான், பாசிபருப்பு, போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். 1 வீசில் வந்தவுடன் அனைத்து விடவும்.
பிறகு குக்கரை திறந்து உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஒரு கப்பில் ஊற்றி சூடாக பரிமாறவும்.