பார்லி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பார்லி - 1/4 கப்

வெஜிடபுள் ஸ்டாக் - 5 கப்

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 2

காரட் - 1

செலரி - 1 கப்

ஜுக்கினி - 1

மஷ்ரூம் - 1 கப்

காலிஃப்ளவர் - 1 கப்

பூண்டு - 3 பல்

சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா தூள் - 1/4 தேக்கரண்டி

காய்ந்த பார்ஸ்லி - 1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை, கிராம்பு, வெண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கொண்டைக்கடலையை ஊற வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெண்ணெயை உருக்கி தாளிக்க கூறியுள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் எல்லா காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் ஓரளவு வதங்கியதும் வெஜிடபுள் ஸ்டாக் சேர்த்து வேண்டுமென்றால் கூடுதலாக தண்ணீர் சேர்க்கவும். தண்ணீரே இல்லாமல் வெறும் ஸ்டாக் மட்டுமே உபயோகித்தும் செய்யலாம்.

மிளகாய் பொடி, தனியா பொடி, மிளகு தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.

காய்கறிகள் ஓரளவு வெந்ததும் பார்லி சேர்க்கவும். தண்ணீர் அளவு பார்த்துக் கொண்டு தேவை ஏற்பட்டால் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

பார்லி சேர்த்து தீயை குறைத்து மூடி வைக்கவும். மிதமான தீயில் முக்கால் மணி நேரம் வேக விடவும்.

பார்லி பூ போல மலர்ந்ததும் பார்ஸ்லி சேர்த்து சிறிதளவு கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கி பிரெஷ் கிரீம் சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

பார்லியில் அதிக நார்சத்து இருக்கிறது. அதில் உள்ள ஒரு வகையான நார்சத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. வெயில் காலத்தில் முன்பு எல்லாம் பார்லி கஞ்சி வைத்து குடிப்பார்கள். அது சூட்டை தணிக்க உதவும்.