நூடுல்ஸ் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ளைன் நூடுல்ஸ் - 100 கிராம்

கேரட் - 1

பீன்ஸ் - 5

கோஸ் - 50 கிராம்

வெள்ளை வெங்காயம் - பாதி

செலரி - சிறிது

ஸ்பிரிங் ஆனியன் - 3

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 1/2 தேக்கரண்டி

அஜின மோட்டோ - 1/2 தேக்கரண்டி

கார்ன் மாவு - 2 தேக்கரண்டி

பட்டர் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், கோஸ், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

சுமார் ஒரு லிட்டர் நீரில் அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

3/4 லிட்டர் ஆக வற்றும் வரை கொதிக்க விடவும்.

நூடுல்ஸை வேக வைத்து குளிர்ந்த நீரில் நனைத்து ஆறியதும் சிறிது சிறிதாக போட்டு எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்துக்கொள்ளவும்.

1 டீஸ்பூன் பட்டர் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, வெந்த காய் மற்றும் வெஜிடபிள் ஸ்டாகை இதில் சேர்க்கவும்.

கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் கார்ன் மாவை கலந்து சேர்த்துக்கிளறவும்

சோயா சாஸ், பொடியாக நறுக்கிய செலரி, ஸ்பிரிங் ஆனியன், மிளகுப்பொடி அனைத்தையும் கலந்து இறுதியாக பொரித்த நூடுல்ஸை சேர்த்து சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: