தாய்லாந்து சீ ஃபுட் சூப்
தேவையான பொருட்கள்:
முள்ளில்லாத சதைப்பகுதி வஞ்சிரம் மீன் முள்ளில்லாத சதைப்பகுதி ஒரு துண்டு - 50 கிராம்
இறால் - 15
நண்டுக்கால் - 2
மஷ்ரூம் (காளான்) - 8
பச்சை இஞ்சி - ஒரு துண்டு
லெமன் கிராஸ் - 2
எலுமிச்சை மர இலைகள் -4
எலுமிச்சை பழம் - 1
சீனி - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பிஷ் சாஸ் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 3 கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
மீன், இறால், நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.
லெமன் கிராசை (அடிப்பக்கம்) வெள்ளைப்பகுதியை வெட்டி எடுக்கவும்.
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
இஞ்சியை மெலிதான துண்டுகளாக நறுக்கவும்.
காய்ந்த மிளகாயை பொடி செய்து கொள்ளவும்.
காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
எலுமிச்சையை சாறு பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு தவிர மற்ற அனைத்தையும் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்தவுடன் எலுமிச்சை சாறை உடனடியாக சேர்த்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
பிஷ் சாஸ் கிடைத்தால் நல்லது. இல்லாவிடில் சுவை பெரிதாக மாறாது.