தனியா சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தனியா - 1/4 கப்

சீரகம் - 2 தேக்கரண்டி

மிளகு - 10

கறிவேப்பிலை - 2 கொத்து

எலுமிச்சம் பழம் - 1

இஞ்சி - சிறிது

பச்சைக் கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தனியா, சீரகம் இரண்டையும் ஒன்றாக 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் மிளகு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தனியா, சீரகம் ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இறக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைக் கொத்தமல்லி சேர்த்து சூடாகப் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: