டொமேட்டோ பேசில் சூப்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 300 கிராம்
பூண்டு - 5 பற்கள்
வெங்காயத் தாள் - 2
ரசப்பொடி - 1 தேக்கரண்டி
சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி
பால் - தேவையான அளவு
வெங்காயம் - பாதி
பேசில் இலை - 6
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய், நெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். தக்காளி, பூண்டு, வெங்காயம், வெங்காயத் தாள், பேசில் இலை ஆகியவற்றைக் கழுவிவிட்டு நறுக்கிக் கொள்ளவும். சத்து மாவில் சூடான பால் விட்டு கரைத்து மூடி வைக்கவும்
கடாயில் எண்ணெய், நெய் விட்டு வெங்காயம், வெங்காயத் தாள், பூண்டு, தக்காளி மற்றும் பேசில் இலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டி, அத்துடன் சத்து மாவுக் கலவையைக் கலந்து வேகவிட்டு இறக்கி சீஸ் அல்லது பேசில் இலை அல்லது ப்ரெட் துண்டுகள், மிளகு தூள் சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
காரத்திற்கேற்ப பேசில் இலையைச் சேர்க்கவும்.
வடிகட்டாமலும் பரிமாறலாம். சத்து மாவு இல்லையெனில் சோள மாவு சேர்த்து கொள்ளலாம்.