சைனீஸ் சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கி

வெங்காய தாள் - 1/2 கப் ( வெங்காயம் தனியாக , கீரை தனியாக பொடியாக அரிந்து கொள்ளவும்)

நீளமாக அரிந்த குடைமிளகாய் - 1

முட்டை - 1

சோள் மாவு - 1/2 கப்

அஜின மோட்டோ - 1 சிட்டிகை

பூண்டு - 6 பல்

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 1 லிட்டர்

உப்பு - ருசிக்கேற்ப்ப

செய்முறை:

முதலில் சிக்கனை கழுவி 2 கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவைக்கவும்.

ஆறியதும் எலும்பை நீக்கி விட்டு இறைச்சியை மட்டும் எடுத்து கொள்ளவும்

ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பட்டரை போடவும்

பட்டர் உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தயும், பூண்டையும் போட்டு வதக்கவும்.

அடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிய சிக்கனை போட்டு வேக விடவும்.

பிறகு அரிந்தா குடைமிளகாயை சேர்க்கவும்.

சிக்கன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி, மேலும் 1 லி தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும் இப்பொழுது அஜினமோட்டோவை சேர்க்கவும்

சோள மாவை 1 கப் நீரில் கரைத்து சூப்பில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு உப்பு சேர்க்கவும்.

முட்டையை நன்றாக அடித்து, அதை கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் ஊற்றும் போதே,ஒரு முள் கரண்டி கொண்டு சூப்பில் விழும் முட்டயை கலக்கி கொண்டேயிருக்கவும். அப்பொழுதுதான் சூப்பின் மேல் முட்டை நூல் நூலாக திரிந்து மிதக்கும்.

சூடாக அருந்த சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: