கறி பருப்பு சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள் :

எலும்புக் கறி (சிறு துண்டுகள்) - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெந்த பருப்பு - 3 மேசைக்கரண்டி

அரிந்த புதினா இலைகள் - 1/4 கப்

இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சம்பழம் - 1

அரிந்த கொத்தமல்லி - 1/2 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்

சாம்பார் வெங்காயம் - ஒரு கை

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவுs

கீழ்க்கண்ட பொருள்களை ஒரு ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும்:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

ஏலக்காய் - 1

பட்டை - 1

கிராம்பு - 1

செய்முறை:

ஒரு சிறிய பாத்திரத்தில் கறித்துண்டங்களை இரண்டு கப் நீரில் மஞ்சள் தூளுடன் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய்யும் எண்ணெயும் ஊற்றி சூடு செய்யவும்.

சாம்பார் வெங்காயங்களை பொடியாக அரிந்து போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை, மேலே எண்ணெய் தெளியும்வரை வதக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பொடித்ததைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

கொத்தமல்லி, புதினாவைச் சேர்த்து சில வினாடிகள் பிரட்டவும்.

கறித்துண்டுகள், அவை வேக வைத்த நீர், வெந்த பருப்பு, மூன்று கப் நீர், உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து, கொதி நிலை அடங்கியதும் எலுமிச்ச பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கவும்.

குறிப்புகள்: