எலும்பு சூப் (பிள்ளை பெற்றவர்களுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பில் வேக வைக்க வேண்டியது:

கறி உடைய மார்கண்டம் எலும்பு - 6 துண்டு

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - 1/4 டம்ளர்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நெய் - 2 தேக்கரண்டி

கரம் மாசாலா தூள் - 1/4 தேக்கரண்டி

வெங்காயம் - 1/4 பாகம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

எலும்பை கழுவி சுத்தம் செய்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

நெய்யில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து சூப்பில் கலக்கவும்.

குறிப்புகள்:

இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்யும் சூப்பாகும். உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும்.

நாற்பது நாட்களுக்கு இந்த சூப்பை டெய்லி செய்து மதிய உணவின் போது அவித்த முட்டையுடன் சாப்பிடவும்.