இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்
0
தேவையான பொருட்கள்:
இராசவள்ளிக் கிழங்கு (King Yam) - 1 (2 கப்)
முதல் தேங்காய் பால் - 1/2 கப்
இடண்டாம் தேங்காய் பால் - 2 கப்
சீனி - 1 அல்லது 11/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் 2 கப் வர வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம்.