ஆப்ரிகாட் ஓட்மீல் (குழந்தைகளுக்கு)
0
தேவையான பொருட்கள்:
பழுத்த பழம் விதை நீக்கிய ஆப்ரிகாட் - 2
ஓட்ஸ் - 4 தேக்கரண்டி
பால் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசிக்கவோ செய்யலாம். 10 நிமிடம் வெந்தால் போதுமானது.
பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும் தீயை அணைத்து ஆறவிடவும்.
ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து 6+ மாத குழந்தைக்கு ஊட்டவும்.