ஆப்பிள் சூப் ( குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1

உருளைக்கிழங்கு - 1/2 பாகம்

பால் - 1 கப்

அரை மணிநேரம் ஊறவைத்த துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

கார்ன் ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி

மிளகு தூள் - தேவையான அளவு

பட்டர் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆப்பிளை தோலெடுத்து பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கையும் தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கவும்.

இப்போது குக்கரில் நறுக்கிய ஆப்பிள் துண்டு, உருளைக்கிழங்கு, ஊறவைத்த பருப்பு முன்றையும் போட்டு ஒரு பின்ச் சால்ட் போட்டு நல்ல தீயை மிதமாக வைத்து வேகவிடவும்.

வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

தனியாக சட்டியில் பட்டரை உருக்கி மிக்ஸியில் அடித்த கலவையை ஊற்றி பாலில் கார்ன் ஃப்ளார் மாவை கரைத்து ஊற்றி தேவையான அளவுக்கு காரம் பார்த்து மிளகு தூள் சேர்த்து கொடுக்கவும்

குறிப்புகள்: