அகத்திக்கீரை சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கப்

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

பச்சரிசி - 2 தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 15

தக்காளி நறுக்கியது - 2

கிராம்பு - 3

பட்டை - 1 சிறு துண்டு

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே உள்ள எல்லா பொருட்களையும் (உப்பை தவிர) குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீ ர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை சமைக்கவும்

பிரஷர் அட்ங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும்.

பின் மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும்.

பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சூப் பவுலில் சூப்பை நிரப்பி மிளகுத்தூள் தூவி பறிமாறவும்.

குறிப்புகள்: