வெறுமரிசி தோசை

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு

தேங்காய் துருவல் - 1 மூடி

ஆய்ந்த முருங்கைக்கீரை - 1 கப்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மையாக அரைக்கவும்.

தேங்காயையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து கரைத்து எடுத்து வைக்கவும். (மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும்.)

தோசை வார்க்கும் போது முருங்கைக்கீரையைச் சேர்த்து கலந்து வார்க்கவும். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

மாவை முன்னதாகவே தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.