வெஜிடபிள் அவல் உப்புமா

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவல் - 3 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

வேக வைத்த பட்டாணி - 1/4 கப்

காரட் - 1

தக்காளி - 1

கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பச்சை பட்டாணி என்றால் ஊற வைத்து வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவலுடன் மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஊறவிடவும்.

வெங்காயம், தக்காளி, காரட், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு கடலை பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு 30 நொடிகள் வதக்கவும்.

பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

பொடியாக நறுக்கின காரட் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதன் பின்னர் வேக வைத்த பட்டாணி போட்டு கிளறவிடவும்.

கடைசியாக தக்காளி சேர்த்துக் கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும். தக்காளியை முதலிலேயே வெங்காயம் வதக்கியவுடன் சேர்த்து வதக்கலாம். கடைசியில் சேர்த்தால் தக்காளியின் சுவை நன்கு தெரியும்.

5 நிமிடம் கழித்து காய்கள் வெந்ததும், ஊற வைத்துள்ள அவலை சேர்க்கவும்.

அவலை நன்கு கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

சுவையான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி.

குறிப்புகள்: