வெங்காய தோசை (1)
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 500 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 10 இலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தோசைக்கு சுற்றி ஊற்ற
புதினா சட்னிக்கு:
புதினா இலை - 2 கைப்பிடி இலைகள்
தேங்காய் துருவல் - 3/4 கப்
புளி - 1/2 எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் புதினா சட்னிக்கு கொடுத்துள்ளவற்றை எல்லாம் மிக்ஸியிலோ, அம்மியிலோ வைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் தோசைக்கு தேவையான வெங்காயம், கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
தோசைமாவை ஊத்தப்பம் போலவும் அல்லாமல் மெல்லியதாகவும் அல்லாமல் ஓரளவு கெட்டியாக ஊற்றவும்.
மேலே தூவும் வெங்காயம் பிடிக்குமளவு தடிமன், பின் ஊற்றியதும் மேலே ஒரு 4 ஸ்பூன் அளவு வெங்காயத்தை பரவலாக தூவுங்கள்.
மேல் மாவு வெந்துவிடுவதற்குள் வெங்காயம் தூவாவிட்டால் வெங்காயம் ஒட்டாது.
பிறகு மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் ஒரு ஸ்பூன் சுற்றி ஊற்றி வேக விடுங்கள்.
வெங்காயம் உள்ள புறம் நல்ல மொறுகி வெங்காயம் ப்ரவுன் நிறத்துக்கு மாறி மணக்கும். அப்பொழுது தான் சுவை.
இப்பொழுது சூடான தோசையையும், புதினா சட்னியையும் சேர்த்து சுவையுங்கள். இந்த காம்பினேஷன் அருமையாக இருக்கும்.